×

5 நட்சத்திர ஓட்டல்களில் மேற்குவங்க பெண்களிடம் பா.ஜ ஐடி விங் தலைவர் அத்துமீறல்: ஆர்எஸ்எஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்குவங்க பெண்களை 5 நட்சத்திர ஓட்டல்களில் பா.ஜ ஐடி விங் தலைவர் அமித்மாளவியா தவறாக பயன்படுத்தியதாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர் குற்றும் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ கட்சியில் ஐடி விங் தலைவராக இருப்பவர் அமித்மாளவியா. இவர் மேற்குவங்க பெண்களை 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பா.ஜ அலுவலகங்களில் தவறாக பயன்படுத்தியதாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா தனது எக்ஸ் பக்கத்தில் புகார் தெரிவித்தார்.

அதில்,’ பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமின்றி, மேற்குவங்கத்தில் உள்ள பாஜ அலுவலகங்களிலும் பெண்களை பாலியல் சுரண்டலில் ஈடுபட்டுள்ளார்’ என்று குற்றம் சாட்டினார்.  இது அரசியல் அரங்கில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அமித்மாளவியை பா.ஜ ஐடி விங்க் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் வற்புறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஷிரினேட் நேற்று டெல்லியில் கூறுகையில்,’ பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மேற்குவங்கத்தில் மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளது ஆர்எஸ்எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா குற்றம் சாட்டு மூலம் தெரிய வந்துள்ளது. 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் உள்ள பாஜ அலுவலகங்களிலும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இந்த விவகாரத்தில் அமித்மாளவியாவை அவரது பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே இந்த சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த முடியும். பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜவின் ஐடி பிரிவின் தலைவரான மிக முக்கியமான அதிகாரி மீது பாலியல் சுரண்டல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனவே அமித் மாளவியாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர் வகிப்பது மிகவும் செல்வாக்கு மிக்க பதவியாகும். அவர் பதவியில் இருந்து நீக்கப்படாத வரையில் சுதந்திரமான விசாரணை நடத்த முடியாது’ என்று கூறினார்.

* ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ்
தன்மீது குற்றம் சாட்டி பதிவிட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்று அமித்மாளவியா அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கடந்த 8ம் தேதி தனது வக்கீல் மூலம் சாந்தனு சின்ஹாவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள நோட்டீசில்,’ என் மீதான தவறான, இழிவான பதிவை நீக்க வேண்டும்.

மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு எனது பெயரின் கண்ணியம் மற்றும் நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே 3 நாட்களுக்குள் பதிவை நீக்கி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மனரீதியான துன்புறுத்தல், வேதனைக்காக ரூ.10 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post 5 நட்சத்திர ஓட்டல்களில் மேற்குவங்க பெண்களிடம் பா.ஜ ஐடி விங் தலைவர் அத்துமீறல்: ஆர்எஸ்எஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : JIT Wing ,RSS ,NEW DELHI ,WESTERN ,Amitmalavia ,Pa. ,Amitmalaviya ,IT Wing ,JA Party ,Dinakaran ,
× RELATED அதீத நம்பிக்கையில் இருந்த பாஜவுக்கு...