×

மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி கர்நாடக வாலிபர்கள் சிக்கினர்: விரட்டி பிடித்த காவலருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை, ஜூன் 11: சென்னை மெரினா கடற்கரைக்கு, கடந்த 9ம் தேதி சுற்றுலா பயணி ஒருவர் வந்தார். அவர், உழைப்பாளர் சிலை பின்புறம் நின்று கொண்டிருந்த போது, திடீரென 2 மர்ம நபர்கள், சுற்றுலா பயணி வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அப்போது மெரினா கடற்கரையில் உள்ள உயிர் காக்கும் பிரிவில் பணியில் இருந்த காவலர் அருண்குமார், விரைந்து செயல்பட்டு, அந்த 2 கொள்ளையர்களை துரத்தி பிடித்து, அண்ணாசதுக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மோகன்னா (26) என தெரியவந்தது. இருவரும் கடந்த 8ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் ஜாஸ்மின்(22) என்ற இளம் பெண்ணிடம் கைப்பையை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 2 கைக்கடிகாரங்கள் 1 பேக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகளை பிடித்த காவலர் அருண்குமாரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

The post மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி கர்நாடக வாலிபர்கள் சிக்கினர்: விரட்டி பிடித்த காவலருக்கு கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Marina beach ,Chennai ,Chennai Marina Beach ,
× RELATED மெரினாவில் குளித்த போது அலையில்...