×

புதுவையில் 6 பேரிடம் ₹19.98 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூன் 11: புதுவையில் 6 பேரிடம் ரூ.19.98 லட்சத்தை மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி கதிர்காமம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி கிருஷ்ணசாமியும், மர்மநபர் அனுப்பிய லிங்கில் ரூ.12.50 லட்சத்தை முதலீடு செய்த நிலையில் மீண்டும் அப்பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதேபோல் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பவானி சங்கர் என்பவரும் கிரிப்டோ கரன்சியில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

மேலும் வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் கிரடிட் கார்டிலிருந்த ரூ.1.99 லட்சத்தை மோசடி கும்பல், அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளது. அவரின் ஜி-பே மூலமாகவும் ரூ.32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசன் ரூ.8,900, காரைக்கால் காளிதாஸ் ரூ.5,300 மற்றும் புதுச்சேரி முஸ்தபா என்பவர் ரூ.3,500 என ேமாசடி கும்பலிடம் நூதனமாக தங்களது பணத்தை இழந்துள்ளனர். மேற்கூறிய 6 நபர்கள் சுமார் ரூ.19.98 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post புதுவையில் 6 பேரிடம் ₹19.98 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Krishnasamy ,Kadirgamam ,
× RELATED விஷவாயு வந்தது எப்படி?.. ஆய்வு செய்ய புதுச்சேரி விரைகிறது ஐஐடி குழு