×

மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம் விநியோகம்

போச்சம்பள்ளி, ஜூன் 11: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் துவங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வாழ்த்து கூறி வரவேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை கலந்து கொண்டு, மாணவர்களை வாழ்த்தி, அரசின் இலவச பாட புத்தங்களை வழங்கி, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன், உதவி தலைமை ஆசிரியர் சின்னதுரை, உடற்கல்வி இயக்குனர் சிவசந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Mathur Government Boys Higher Secondary School ,Education ,Manimegali ,Dinakaran ,
× RELATED கால்வாயில் விழுந்த பெண் சடலமாக மீட்பு