×

பள்ளிகள் திறப்பு எதிரொலி: திருவொற்றியூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருவொற்றியூர்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக பெற்றோர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் சென்றனர். பள்ளி வேன், பஸ்களிலும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் ஏராளமான மாணவர்கள் குவிந்தனர். இவர்கள் வந்த பைக், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

இதன்காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றதால் தவித்தனர். மேலும் திருமண மண்டபங்களுக்கு வந்தவர்களின் வாகனங்கள் அனைத்தும் சாலையோரம் நிறுத்தப்பட்டதால் மேலும் போக்குவரத்து பாதித்தது. இனிமேல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பள்ளி நேரத்தில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்’ என்று பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post பள்ளிகள் திறப்பு எதிரொலி: திருவொற்றியூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : THIRUVOTIYUR ,Tamil Nadu ,Thiruvotiyur Highway ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டி...