×

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நாளை முதல் 3 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம்!!

சென்னை : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நாளை முதல் 3 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.அரசு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்தும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.அதன்படி, சென்னை, செங்கல்பட்டு காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகை, மற்றும் -திருவாரூர் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

13-ம் தேதி கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி
ஆட்சியர்களுடன் 13-ம் தேதி-தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொள்கிறார். 15-ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு நடத்தப்படுகிறது. விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் 15ம் தேதி தலைமை செயலாளர் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

The post அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நாளை முதல் 3 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivtas Meena ,Chennai ,Shivdas Meena ,Dinakaran ,
× RELATED திடீர் கனமழை வந்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!