×

அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சென்னை: அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ளவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது என டெல்லியில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளிக்கையில் கூறியதாவது; அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி வெற முடியாது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் அதிகரித்தது, அண்ணாமலையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பாஜகவின் வெற்றிக்காக 24 மணிநேரமும் பாடுபட்டவர் அண்ணாமலை. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான்.

மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அண்ணாமலை அரும்பாடு பட்டதால் பாஜகவிற்கு இந்த வாக்கு சதவீதம் கிடைக்க காரணம். அண்ணாமலை 24 மணிநேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார். அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.

 

The post அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,O. Panneerselvam ,Chennai ,Modi ,Delhi ,
× RELATED அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச்...