×

பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்குக: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தலில் மேற்கு வங்க பா.ஜ.க. பார்வையாளராக இருந்த அமித் மாளவியா, பல பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியாக புகார் எழுந்துள்ளது. பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது மேற்கு வங்க பா.ஜ.க. நிர்வாகியின் உறவினர் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா என்பவரே பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 5 நட்சத்திர ஓட்டல் மட்டுமல்ல மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அலுவலகத்திலேயே பெண்களிடம் அமித் மாளவியா அத்துமீறியுள்ளார்.

பாலியல் புகாருக்குள்ளான அமித் மாளவியாவை பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தேசிய தலைவர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும். அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்காதவரை சுதந்திரமான விசாரணை நடத்த முடியாது; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. இவ்வாறு கூறினார்.

The post பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்குக: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bo ,J. K. ,AMIT MALAWIYA ,CONGRESSIONAL ,Delhi ,Amit Malaviya ,R. S. S. Congress ,Lok Sabha ,West Bengal ,J. K. Amit Malaviya ,Dinakaran ,
× RELATED ஐ.பி.எல். போட்டியில் தோற்றுக் கொண்டே...