×

நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்

நாமக்கல் : கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று (10ம்தேதி) திறக்கப்படுகிறது. இதற்கிடையே விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர்கள், நேற்று ஊர் திரும்பினார்கள். இதனால் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் காணப்பட்டது.

கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி செல்லும் பஸ்கள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் சிரமமின்றி பயணிக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது. இருந்தாலும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி நாமக்கல் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Namakkal bus station ,Namakkal ,Tamil Nadu ,
× RELATED இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு