×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

நெல்லை : நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விகேபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தையோட்டி விகேபுரத்தில் நடந்த விழாவில் இலவசமாக குருவிக்கூடுகள் வழங்கப்பட்டன.

விகேபுரம் மூன்று லாம்ப் பகுதியில் உலகச்சுற்றுச்சூழல்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீர்நிலைகளை காக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, பல்லுயிர் பெருக்கத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு உறுதுணையாக இருக்கும், அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை அதன் அழிவில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு இலவசமாக குருவிக்கூடுகள் வழங்கப்பட்டன.

மேலும் வீதிகளிலும், வீடுகளிலும் மக்களின் விருப்பப்படி கூடுகள் கட்டி தொங்கவிடப்பட்டன. ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் குருவிக்கூடுகளை விரும்பி வாங்கிச் சென்றனர். விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சுடலைமணி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சுதர்சன், மாரிநிக்கிதா, வான்மதி, பால்சாமி, ரத்தினம், தர்சினி, சரண்யா குழுவினர் மற்றும் மாணவர்கள் யோகேஷ், திபு, முருகன் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவச குருவிக்கூடுகளை வழங்கினர்.

ஏற்பாடுகளை சமூக ஆர்வலரான கிரிக்கெட் மூர்த்தி செய்திருந்தார்.இதேபோல் விகேபுரம் கிளை நூலக பொதிகை வாசகர் வட்டத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. இதில் வாசகர் வட்டத் தலைவர் மைதீன் பிச்சை தலைமை வகித்தார். நூலகரும் வாசகர் வட்ட செயலாளருமான குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பற்றி பேச்சு போட்டி நடந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

முன்னாள் பொதிகை வாசகர் வட்ட தலைவர் வல்சகுமார், விகேபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ், பேஷன் லயன்ஸ் கிளப் தலைவர் பொன்ராஜ் வாழ்த்துரை வழங்கினர்.
ஆழ்வார்குறிச்சி  பரமகல்யாணி மேல்நிலை பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாடசாமி ரூ.1000 செலுத்தி புரவலராக தன்னை இணைத்து கொண்டார். சுற்றுச்சூழல் தின பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வாசகர் வட்ட துணைத் தலைவர் இளங்கோ, இணைச் செயலாளர்கள் சிவராம சுப்பிரமணியன், சிதம்பரநாதன், செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜாராம், நூலக பெரும் புரவலர் கணேசன், முத்துக்குமார், நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் வாசக உறுப்பினர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட மூத்த நிர்வாகி பேராசிரியர் சிவசங்கரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நூலக உதவியாளர் கைலாசம், சங்கரகோமதி செய்திருந்தனர்.

கடையம்: ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி நிர்வாகமும், பசுமை உலகம் மரம் வளர் அமைப்பும் இணைந்து ஆழ்வார்குறிச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடின. இதையொட்டி சிவசைலம் சாலையில் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி தலைமையில் பசுமை உலகம் மரம் வளர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் மாடசாமி முன்னிலையில் பயன்தரும் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் பசுமை ஆர்வலர் முத்துப்பாண்டி, பேரூராட்சி ஊழியர்கள் மீரான், ஆறுமுக கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயற்கை மற்றும் சமூக ஆர்வலருமான சுரேஷ் மற்றும் முத்துக்குமார் செய்திருந்தனர்.களக்காடு: களக்காடு அருகேயுள்ள கருவேலங்குளத்தில் மேஜிக் பஸ் நிறுவனம், அட்டாஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கருவேலன்குளம் ஊர் தலைவர் சுகுமார், கல்வியாளர்கள் செல்லம்மாள், ஆக்னஸ் பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. கல்வியாளர் பெனிமா நன்றி கூறினார்.

களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி சூழல் வனச் சரகத்தின் சார்பில் ஆவரந்தலையில் சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. திருக்குறுங்குடி சூழல் திட்ட வன சரகர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வனவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

கிராம வனக்குழு தலைவர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள், வனத்துறை ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், வன பாதுகாப்பில் கிராம மக்களின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டது. வனக்குழு சேர்மன் செல்வி பேசினார். தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

The post நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Environment Day ,Nella, Tenkasi District ,Paddy ,Paddy, World Environment Day ,Tenkasi district ,Wikepuram ,Vikepuram ,Paddy, Tenkasi District ,Dinakaran ,
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி