×

மீன்பிடி தடைகாலம் தொடர்வதால் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைவு

*விலை அதிகரிப்பு

திருப்பூர் : திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி செல்வார்கள். மீன் மார்க்கெட்டில் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் மீன் இனப்பெருக்க காலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் டேம் மீன்களான பாறை, நெய் மீன், கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. கடல் மீன்களின் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி வஞ்சிரம் ரூ.700, விலமீன் ரூ.560, இறால் சிறியது ரூ.400 இறால் பெரியது ரூ.600 மத்தி மீன் ரூ.160, டேம்பாறை ரூ.110, நெய்மீன் ரூ.100 ஆகிய விலைக்கு விற்பனையானது.

The post மீன்பிடி தடைகாலம் தொடர்வதால் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைவு appeared first on Dinakaran.

Tags : Thennampalayam market ,Tirupur ,Thirupur Palladam Road Thennampalayam ,Thenampalayam market ,Dinakaran ,
× RELATED தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரிப்பு