×

மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

 

கோவை: மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மேற்குமண்டலம் முழுவதும் திமுகவின் வசமாகி உள்ளது. மேற்கு மண்டலம்.. மேற்கு மண்டலம்..’ என பல பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்..

ஆனால் இன்று மொத்த மேற்கு மண்டலமும் திமுக கையில்தான் இருக்கிறது என்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவின் முப்பெரும் வெற்றி விழாவை கோவையில் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விருப்பம் தெரிவித்தார். கொடிசியாவில் ஜூன் 15ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. திமுக முப்பெரும் விழாவில் 40 எம்.பி.க்களும் கலந்துகொள்கின்றனர். திமுகவினரின் கடுமையான உழைப்புக்கு மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது

The post மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Goa ,Dimuka ,Western Zone ,Minister ,Muthusamy ,KOWAI ,MUTHUSAMI ,Dimuka Mupperum Ceremony ,West Zone ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...