×

மோடி 3.0 அமைச்சரவையில் 7 பெண்கள்.. 24 மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களுக்கு பிரதிநிதித்துவம்; அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 9 பேர்!!!

புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் பிரதமர் மோடி உட்பட பாஜவை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சிகள் சார்பில் 11 பேரும் இடம் பெற்றுள்ளனர். முந்தைய பாஜ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 32 பேருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில்,
*72 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
31 – கேபினெட் அமைச்சர்கள்;
36 – இணையமைச்சர்கள்;
5 – தனிப் பொறுப்பு!

*61 அமைச்சர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள்!
11 பேர் NDA கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்;
7 முன்னாள் முதலமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

*24 மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களுக்கு பிரதிநிதித்துவம்!
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 9 பேர்
பீகார் – 8, மகாராஷ்டிரா – 5;

*43 அமைச்சர்கள் 3வது முறை எம்.பி.மாநில முதலமைச்சர்களாக இருந்த 7 பேரும், அமைச்சர்களாக பணியாற்றிய அனுபவமுள்ள 23 பேருக்கும் அமைச்சரவை பதவி!!

*27 அமைச்சர்கள் ஓபிசி பிரிவு, 10 பேர் SC, 5 பேர் ST; 7 பேர் பெண்கள்!

*அமைச்சரவையில் புதுமுகங்களாக கேபினட் அமைச்சர்கள் 9 பேர்; இணை அமைச்சர்கள் 24 பேர்

*மோடி 3.0 அமைச்சரவையில் மகளிர் 7 பேர் இடம்பிடித்துள்ளனர். மத்திய கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி பொறுப்பேற்றனர். மத்திய இணை-அமைச்சர்களாக சாவித்ரி தாக்கூர், நிமுபென் பம்பானியா, ரக்ஷா கட்சே, ஷோபா கரந்த்லாஜே, அனுப்ரியா பட்டேல் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள்.

*பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவுக்கு (36), அமைச்சர் பதவி. ஒன்றிய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

* கேபினட் அமைச்சர்கள்
1. ராஜ்நாத் சிங்
2. அமித்ஷா
3. நிதின் கட்கரி
4. ஜெ.பி.நட்டா
5. சிவராஜ் சிங் சவுகான்
6. நிர்மலா சீதாராமன்
7. ஜெய்சங்கர்
8. மனோகர் லால் கட்டார்
9. குமாரசாமி
10. பியூஸ் கோயல்
11. தர்மேந்திர பிரதான்
12. ஜிதன் ராம் மஞ்சி
13. லாலன் சிங்
14. சர்பானந்தா சோனோவால்
15. வீரேந்திர குமார்
16. ராம் மோகன் நாயுடு
17. பிரகலாத் ஜோஷி
18. ஜூயல் ஓரம்
19. கிரிராஜ் சிங்
20. அஸ்வினி வைஷ்ணவ்
21. ஜோதிராதித்யா சிந்தியா
22. பூபேந்தர் யாதவ்
23. கஜேந்திர சிங் செகாவத்
24. அன்னபூர்ணா தேவி
25. கிரண் ரிஜிஜூ
26. ஹர்தீப் சிங் பூரி
27. மன்சுக் மாண்டவியா
28. கிசன் ரெட்டி
29. சிராக் பஸ்வான்
30. சி.ஆர்.பாட்டீல்

* இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
31. ராவ் இந்திரஜித் சிங்
32. ஜிதேந்திர சிங்
33. அர்ஜூன் சிங் மேக்வால்
34. பிரதாப் ராவ் யாதவ்
35. ஜெயந்த் சவுத்ரி

* இணை அமைச்சர்கள்
36. ஜிதின் பிரசாதா
37. ஸ்ரீபத் யஸ்ஸோ நாயக்
38. பங்கஜ் சவுத்ரி
39. கிரிஷன் பால்
40. ராம்தாஸ் அலுவாலே
41. ராம்நாத் தாக்கூர்
42. நித்யானந்த் ராய்
43. அனுபிரியா படேல்
44. வி.சோமண்ணா
45. பெம்மசானி சந்திரசேகர்
46. எஸ்.பி.சிங் பாகேல்
47. சோபா கரண்டலேஜ்
48. கீர்த்தி வர்தன் சிங்
49. பி.எல்.வர்மா
50. சாந்தனு தாகூர்
51. சுரேஷ் கோபி
52. எல்.முருகன்
53. அஜய் தாம்டா
54. பண்டி சஞ்சய் குமார்
55. கமலேஷ் பஸ்வான்
56. பாகிரத் சவுத்ரி
57. ரன்வீத் சிங்
58. சதிஷ் துபே
59. சஞ்சய் சேத்
60. துர்கா தாஸ் உய்கி
61. ரக்‌ஷா காட்சே
62. சுகந்தா மஜூம்தர்
63. சாவித்ரி தாகூர்
64. தோகான் சாஹூ
65. ராஜ் பூஷண் சவுத்ரி
66. பிஆர்எஸ் வர்மா
67. ஹர்ஷ் மல்ஹோத்ரா
68. நிமுபென் பம்பானியா
69. முரளிதர் மோஹோல்
70. ஜார்ஜ் குரியன்
71. பபித்ரா மார்கிரிடா

The post மோடி 3.0 அமைச்சரவையில் 7 பெண்கள்.. 24 மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்களுக்கு பிரதிநிதித்துவம்; அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 9 பேர்!!! appeared first on Dinakaran.

Tags : Modi ,UTTAR PRADESH ,New Delhi ,Presidential Palace ,UTTAR ,
× RELATED ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி...