×

பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்க வேண்டும்

 

பொன்னமராவதி,ஜூன் 10: பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியை விட சிறிய ஊர்களில் கூட வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் 42 கிராம ஊராச்சிகள் உள்ள இந்த பெரிய பகுதியில் இதுவரை வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படவில்லை.

இதனால் புதுக்கோட்டைக்கு சென்று வரவேண்டிய நிலையுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சென்று லைன்ஸ் வாங்க செல்வதில்லை.  பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்தால் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். எனவே இப்பகுதி வாகன ஓட்டிகள் நலன் கருதி வட்டார போக்குவரத்துக்கழகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Regional Transport Office ,Ponnamaravati ,Pudukottai district ,Ponnamaravathi ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் வர்த்தகர்கள் இன்று...