×

தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

 

கரூர், ஜூன் 10:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் செல்லாண்டிபாளையம் இடையே விவசாயிகளின் நலன் கருதி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தேவையற்ற கழிவுகள் கலப்பதால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தேஙகி நிற்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் தேக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதோடு, கடும் துர்நாற்றமும் வீசுவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் இந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Rayanoor Chellandipalayam ,Karur Corporation ,
× RELATED சாலைகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல கூடாது