×

1,908 வழக்குகளுக்கு தீர்வு

 

சிவகங்கை, ஜூன் 10: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11 மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 176குற்ற வழக்குகள், 279 சிவில் வழக்கு, 2ஆயிரத்து 370மற்ற குற்ற வழக்குகள் என மொத்தம் 3ஆயிரத்து 626 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இதில் ஆயிரத்து 804வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3கோடியே 75லட்சத்து 62ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1,908 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 69லட்சத்து 20ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலு, நீதிபதிகள் முத்துக்குமரன், கோகுல்முருகன் மற்றும் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்தனர்.

The post 1,908 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,National Law Commission ,State Law Commission ,11 People's Courts ,Lok Adalats ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...