×

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, ஜூன் 10: இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலில் 44 ஆயிரம் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும் அதற்கு துணை போகும் ஒன்றிய அரசை கண்டித்தும் சிபிஎம் மாநில குழு எடுத்த முடிவின் படி உதகை ஏடிசி திடல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆசரா, சங்கரலிங்கம் கண்டன உரையாற்றினர். இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். பிங்கர் போஸ்ட் கிளை செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

The post இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Ooty ,Palestine ,CPM ,Union government ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்