×

சென்னிமலை அருகே மது குடிப்பதை தந்தை தட்டி கேட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

சென்னிமலை, ஜூன் 10: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, மது குடிப்பதை தந்தை தட்டி கேட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை அருகே உள்ள ராமலிங்கபுரம்,பாலக்காட்டுபுதூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கௌதம் (23). திருமணமாகவில்லை. கௌதம், சென்னிமலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கௌதமுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

கடந்த சில நாள்களாக கௌதம் வேலைக்கு செல்லாமல் மது போதையில் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து, அவரது தந்தை கருப்புசாமி தட்டி கேட்டதால் கௌதம் அவரிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருப்புசாமி ஆடு மேய்க்க சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த கௌதம் வீட்டினுள் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கௌதமின் தந்தை கருப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கௌதமை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர், ஏற்கனவே கௌதம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, கௌதமின் தந்தை கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சென்னிமலை அருகே மது குடிப்பதை தந்தை தட்டி கேட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennimalai ,Erode district ,Karupusamy ,Ramalingapuram, Palakkadtuputhur ,Gautham ,
× RELATED சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்