×

நீட் தேர்வை ரத்து செய்ய டிடிவி வலியுறுத்தல்

சென்னை: அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வில் ஆண்டுதோறும் நடைபெறும் குளறுபடிகளாலும், அத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் அடுத்தடுத்த தவறான நடவடிக்கையாலும் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, குளறுபடிகளும், முறைகேடு புகார்களும் நிறைந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, உடனடியாக மறுதேர்வை நடத்துவதோடு, அடுத்து வரும் ஆண்டுகளில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post நீட் தேர்வை ரத்து செய்ய டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,NEET ,Chennai ,AAMUK ,President ,TTV Dinakaran ,National Examinations Agency ,
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...