×

பிரதமர் மோடியின் அதிகாரத்திற்கு கடிவாளம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் அதிகாரத்திற்கு கடிவாளம் கட்டப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். திருத்தணியில் நேற்று நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஜெயக்குமார் பங்கேற்றார். பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ முழு மெஜாரிட்டி பெற்று பிரதமர் நரேந்திர மோடி அதிகாரத்தை முழுமையாக தன் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினார்.

இந்த முறை மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பாஜவின் மத ரீதியான அரசியல் எடுபடாமல் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மோடியின் அதிகாரத்துக்கு கடிவாளம் போடுவார்கள். நாட்டில் 52 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் பதவிக்கு எதிராக அவரது கட்சிக்குள்ளேயே போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடியின் அதிகாரத்திற்கு கடிவாளம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,AIADMK ,minister ,Jayakumar ,CHENNAI ,Modi ,Tiruthani ,former ,
× RELATED குவைத் தீ விபத்தில்...