×

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: நாடு முழுவதும் கடந்த மே 26ம் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது. இத்தேர்வை 1.80 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் 48 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 964 பேர் பெண்கள் ஆவார்கள். ஐஐடி டெல்லி மண்டலத்தை சேர்ந்த வேத்லஹோட்டி 360 மதிப்பெண்களுக்கு 355 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.

பெண்களில் ஐ.ஐ.டி. மும்பை மண்டலத்தைச் சேர்ந்த துவிஜா தர்மேஷ் குமார் படேல் 360க்கு 322 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளார். அவர் அகில இந்திய அளவில் 7வது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் ஆதித்யா (ஐ.ஐ.டி. டெல்லி), போகல்பள்ளி சந்தோஷ் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்), ரிதம் கேடியா (ஐ.ஐ.டி. ரூர்க்கி), புட்டி குஷால் குமார் (ஐஐடி மெட்ராஸ்), ராஜ்தீப் மிஸ்ரா (ஐ.ஐ.டி. மும்பை), கோடூரி தேஜேஸ்வர் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்), துருவி ஹேமந்த் தோஷி (ஐ.ஐ.டி. மும்பை), அல்லடபோனா எஸ்.எஸ்.டி.பி. சித்விக் சுஹாஸ் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) ஆகியோர் உள்ளனர்.

The post ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : JEE ,Chennai ,JEE Advance ,Dinakaran ,
× RELATED ஆகாஷ் மாணவர்கள் ஜெஇஇ தேர்வில் சாதனை