×

இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி.

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து அணியுடனான டி20 உலக கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 36 ரன் வித்தியாசத்தில் வென்றது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச… ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. ஹெட் 34, வார்னர் 39, கேப்டன் மார்ஷ் 35, மேக்ஸ்வெல் 28, ஸ்டாய்னிஸ் 30 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜார்டன் 2, மொயீன், ஆர்ச்சர், அடில் ரஷித், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சால்ட் 37, கேப்டன் பட்லர் 42, மொயீன் 25, லிவிங்ஸ்டன் 15, ஹாரி புரூக் 25* ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா, கம்மின்ஸ் தலா 2, ஹேசல்வுட், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஸம்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Aussies ,England ,Bridgetown ,Australia ,T20 World Cup Group B league ,Kensington Oval ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து -வெஸ்ட்இண்டீஸ் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்