×

ஒடிசாவில் பாஜ அமைச்சரவை 12ம் தேதி பதவியேற்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாஜ அமைச்சரவை பதவியேற்பு விழா 12ம் தேதி நடக்கிறது. ஒடிசா சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில் 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றி பாஜ அமோக வெற்றி பெற்று மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது.புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில பாஜ தலைவர்கள் ஜதின் மோகந்தி, விஜய்பால் சிங் தோமர் நேற்று கூறுகையில்,‘‘ புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை மறுநாளுக்கு மாற்றுவது என முடிவு எடுக்கப்பட்டது. நாளை சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.

The post ஒடிசாவில் பாஜ அமைச்சரவை 12ம் தேதி பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : BJP cabinet ,Odisha ,Bhubaneswar ,Odisha Assembly elections ,BJP ,
× RELATED ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்