×

தஞ்சையில் புதுமனை புகுவிழாவுக்கு மகனுடன் காரில் சென்ற திமுக பிரமுகர் கொலை

வல்லம்: புதுமனை புகுவிழாவிற்கு காரில் மகனுடன் தஞ்சாவூர் சென்ற திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பாபு (48). திமுக பிரமுகரான இவர், திருமண மண்டபம் வைத்துள்ளதோடு காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்தார். நேற்று மதியம், தஞ்சாவூரில் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் மகன் பாலாவுடன் சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் ஒரு கடை அருகில் காரை நிறுத்தினார். அவரது மகன் பாலா இறங்கி மொய் கவர் வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.

அப்போது எதிரே வந்த கார் இவரது காரை வழி மறித்து நின்றது. காரில் இருந்தவர்கள் சத்தமாக ஹாரனை தொடர்ந்து எழுப்பினர். காரில் இருந்து கீழே இறங்கி வந்த பாபு, எதற்காக காரை வழிமறித்தீர்கள் என கேட்டார். உடனே 2 பேர் அரிவாளுடன் இறங்கிவந்து மகன் கண்முன் பாபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

The post தஞ்சையில் புதுமனை புகுவிழாவுக்கு மகனுடன் காரில் சென்ற திமுக பிரமுகர் கொலை appeared first on Dinakaran.

Tags : DMK ,Thanjavur ,Vallam ,Pudumanai Puguvizha ,Babu ,Chozinganallur ,Tiruvarur district ,Karaikal ,
× RELATED ஏற்றமிகு வாழ்வருளும் ஏகௌரி அம்மன்