×

காஷ்மீரில் பயங்கரம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி: 33 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோரி சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் ஒரு பேருந்தில் கத்ரா பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று மாலை 6.15 மணிக்கு போனி பகுதியில் உள்ள டெரியாத் என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

எதிர்பாராத இந்த தாக்குதலால் டிரைவர் நிலைகுலைந்தார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 10 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

The post காஷ்மீரில் பயங்கரம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி: 33 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Jammu and ,Shivgori Shiva ,temple ,Jammu and Kashmir ,Reasi ,Katra ,Dinakaran ,
× RELATED தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்