×

ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல்


புதுடெல்லி: ஆமாம்… நான் சிங்கம் என்று சோனியா காந்தி கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஒன்றிய அமைச்சராக இருந்த பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மா, கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவியுடன் டெல்லிக்கு வந்தார். அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து, தனது எம்பி வெற்றி சான்றிதழை காட்டினார்.

இந்த சந்திப்பின் போது கிஷோரி லால் சர்மாவின் மனைவி, ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டினார். அப்போது சோனியா காந்தியை பார்த்து, ‘நீங்கள் சிங்கக்குட்டியைப் (ராகுல்) பெற்றெடுத்தீர்கள்’ என்றார். இதற்கு சோனியா காந்தி சிரித்துக்கொண்டே, ‘ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்’ என்றார். தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா நெட் இந்த வீடியோவை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ராகுல்காந்தி கூறுகையில், ‘நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் (காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள்) கோழைகள்; அவர்கள் வெளியேறியது நல்லது தான். அவர்களில் பெரும்பாலோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் நமக்கு தேவையில்லை’ என்றார்.

The post ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Sonia ,NEW DELHI ,Sonia Gandhi ,Congress party ,
× RELATED தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு