திருவொற்றியூர்: மாத்தூரில் உள்ள பிரபல உணவகத்தில் சாம்பார் சாதத்தில் கம்பளி பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். சென்னை மாதவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபலமான உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்ற நந்தகுமார் என்பவர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்துசாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். பாதி சாப்பிட்ட நிலையில், சாதத்தில் கம்பளி பூச்சி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பணியில் இருந்த உணவக மேலாளரிடம் கேட்டபோது, ‘’கம்பளி பூச்சி இல்லை.
ஒரு காய்கறி வகைதான்’ என்று தெரிவித்துள்ளார். ‘’ காய்கறிக்கும் கம்பளி பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா’’ என்று கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது. இதுசம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. சாம்பார் சாதத்தில் கம்பளி பூச்சி கிடந்தது சமூகவலைதளபக்கத்தில் வைரலாகி வருகிறது.
The post மாத்தூரில் உள்ள பிரபல உணவகத்தில் சாம்பார் சாதத்தில் கம்பளி பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.