×

ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் புதிதாக 12 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன் அருள்மிகு ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி முதல் 3 நாட்களுக்கு யாகசாலை, வாஸ்து ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமம், யஜமான சங்கல்பம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் விஸ்வரூப தரிசனம், கோபூஜை, 5 கால கால பூஜைகள் ஹோமங்களுடன் யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடந்தது.

பின்னர் காலை 8.30 மணியளவில் 12 அடி உயர ஆஞ்சநேயர்மீது பட்டாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

The post ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Arogya Anjaneyar Temple ,Kumbapishekam ,Oothukottai ,Pothukottai ,Anjaneyar Temple ,Taratchi ,Oothukota ,Anjaneyar ,Yakashala ,Vastu Homam ,Sudarsana Homam ,Aarokita Anjaneyar Temple Kumbapishekam ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்