×
Saravana Stores

மக்களவைத் தேர்தல் முடிந்து மீண்டும் தொழில் நகரமான திருப்பூருக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்

திருப்பூர்: நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் பின்லாடை நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் முடிவு அடைந்தாலும் கூட பீகார் , ஒடிசா , மேற்குவங்கம் , பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக வட மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். வாக்களித்த பின்பு தேர்தல் முடிவடைந்தாலும் தேர்தல் முடிவு தெரிந்து கொள்ளும் வரை திருப்பூர் திரும்பாமல் இருந்தனர். இதனால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. கடத்த ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் வடமாநிலங்களில் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி வர தொடங்கி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை பாட்னா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பினர். ஒரே நேரத்தில் வந்திறங்கிய வட மாநில தொழிலாளர்களால் ரயில் நிலையம் முழுவதும் வட மாநில தொழிலாளர்களாக காணப்பட்டனர்.

The post மக்களவைத் தேர்தல் முடிந்து மீண்டும் தொழில் நகரமான திருப்பூருக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,18th general election ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் காற்று அதிகமாக...