×

தென்னிலை கடைவீதியில் அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலி

க.பரமத்தி, ஜூன் 9: தென்னிலை கடைவீதியில் மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சாவு குறித்து தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் அருகே தொப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் நாச்சியப்பன் (70), இவர் ஊரில் இருந்து மொபட்டில் புறப்பட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தென்னிலை கடைவீதி பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் முதியவருக்கு படுகாயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். விபத்து குறித்து வழக்கு பதிந்து அரசு பேருந்து ஓட்டுனரை பொள்ளாச்சி சதீஷ் மீது தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தென்னிலை கடைவீதியில் அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tenilai shopping street ,Paramathi ,Thenli police ,Thenli shopping street ,Palanichamy ,Nachiyappan ,Thoppambatti ,Karur ,
× RELATED தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி...