×
Saravana Stores

நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; உடல் கிடந்த இடத்தில் பதிவான 75 ஆயிரம் செல்போன் எண்கள்: சந்தேக எண்களை சிபிசிஐடி ஆய்வு

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார், இரு குழுக்களாக விசாரித்து வருகின்றனர். ஜெயக்குமார் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது. தொடர்ந்து உடல் கிடந்த 7 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனாலும் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில் உடல் கிடந்த பகுதியில், சம்பவத்தன்று இரவு முதல் காலை வரை பதிவான செல்போன் எண் பட்டியலை சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ளனர்.

இதில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிக நேரம் பேசிய எண்கள், சில நிமிடங்களில் கட்டானவை என தனித்தனியாக பில்டர் செய்து. சந்தேக எண்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் ஆய்வு செய்த வருகின்றனர். மேலும் குட்டம் பகுதியில் சுவிட்ச் ஆப் ஆன ஜெயக்குமாரின் செல்போன்களை தேடும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

The post நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; உடல் கிடந்த இடத்தில் பதிவான 75 ஆயிரம் செல்போன் எண்கள்: சந்தேக எண்களை சிபிசிஐடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,CBCID ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Nellai Kang ,Dinakaran ,
× RELATED கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்கலெக்டர் அலுவலகம் முன் 3 குழந்தைகளுடன் தர்ணா