×

கொல்கத்தாவில் மோதல்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய நடிகர்

கொல்கத்தா: உணவக உரிமையாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், நடிகருமான சோஹம் சக்ரவர்த்தி மன்னிப்பு கேட்டார். கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள ஒரு உணவக வளாகத்தில் இலவசமாக படப்பிடிப்பு நடத்தி கொள்ள உணவக உரிமையாளர் அனுமதி வழங்கியிருந்தார். அந்த படப்பிடிப்பில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் பேரவை உறுப்பினரும், நடிகருமான சோஹம் சக்ரவர்த்திக்கும், உணவக உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சோஹம் சக்ரவர்த்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் நண்பர் என உணவக உரிமையாளரிடம் எடுத்து சொல்லியுள்ளனர்.

அதற்கு “மோடியின் நண்பராக இருந்தாலும், அபிஷேக் பானர்ஜியின் நண்பராக இருந்தாலும் கவலையில்லை” என்று உணவக உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் சோஹம் சக்ரவர்த்தி உணவக உரிமைளாயர் அனிசுல் ஆலமை முகத்தில் அறைந்ததுடன், காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடிகர் சோஹம் சக்ரவர்த்தி மன்னிப்பு கேட்டார்.

The post கொல்கத்தாவில் மோதல்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய நடிகர் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Trinamool Congress ,MLA ,Soham Chakraborty ,New Town ,Clash ,
× RELATED மத்தியில் ஆட்சி அமைக்க இண்டியா...