×

நடப்புக் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டி வெளியீடு

சென்னை: நடப்புக் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நாளை முதல் (ஜூன் 10ம் தேதி ) தொடங்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளியின் வேலை நாட்கள், விடுமுறைகள், 1 முதல் 12ம் வகுப்புக்கான தேர்வு காலங்கள், உயர்க்கல்விக்கான வழிகாட்டு வகுப்புகள் போன்றவற்றுக்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

The post நடப்புக் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,
× RELATED தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு