×

காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 182 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 182 குறை தீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், முன்னிலையில் நேற்று காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 182 மனுக்களை பெற்றார்.

காவல்துறை தலைமை இயக்குநர் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவிதொகை கோருதல், உள்ளிட்ட 182 மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தங்களது குறைகள் தொடர்பாக தன்னை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். இம்முகாமில், கூடுதல் காவல் ஆணையாளர் கபில்குமார் சி சரட்கர், காவல் இணை ஆணையாளர் கயல்விழி, காவல்துறை உதவி தலைவர் ஸ்ரீநாதா, பாலாஜி, மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் உயர் அதிகாரிகளுடன் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

The post காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 182 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Camp ,DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Special Police Grievance Redressal Camp ,Tamil Nadu ,Director General ,Dinakaran ,
× RELATED காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை...