×

பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வலை வீட்டுக்கு அழைத்து சென்று எஸ்.ஐ.டி விசாரணை


பெங்களூரு: பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கர்நாடக மாநிலத்தை அதிர வைத்த பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா எஸ்.ஐ.டியால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது காவல் நாளையுடன் காவல் முடியும் நிலையில், நேற்று பிரஜ்வலின் வீட்டிற்கு அவரை அழைத்து சென்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரித்தனர். பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட சில பெண்களை ஹொலெநரசிபுராவில் உள்ள பிரஜ்வலின் வீட்டிற்கு அழைத்து சென்று எஸ்.ஐ.டி அதிகாரிகள், நடந்த சம்பவங்களை விவரிக்குமாறு ஏற்கனவே கேட்டறிந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரஜ்வலை அவரது ஹொலெநரசிபுரா வீட்டிற்கு அழைத்து சென்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு முன்பாகவே, அவரது வீடும், வீடு அமைந்துள்ள பகுதியும் முழுவதுமாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. போலீஸ் வளையத்திற்குள் அவரது வீட்டை கொண்டுவந்த பின்னர் தான், வீட்டிற்கு அழைத்து சென்று எஸ்.ஐ.டி விசாரித்தது. ஹாசன் மாவட்ட ஏஎஸ்பி வெங்கடேஷ் நாயுடு முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

The post பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வலை வீட்டுக்கு அழைத்து சென்று எஸ்.ஐ.டி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Prajwal ,SIT ,Bengaluru ,Prajwal Revanna ,Brajwal Revanna ,Karnataka ,
× RELATED பெங்களூரு பாலியல் வழக்கு; கைதான...