×

எருமைகளை ஏற்றிச்சென்ற 2 பேர் அடித்துக் கொலை


ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நேற்று முன்தினம் அதிகாலை எருமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிலர் சென்றுள்ளனர். அராங்கில் இருந்து மகசமூந்த் சென்றவர்களை கும்பல் விரட்டிச்சென்றுள்ளது. இந்நிலையில் எருமைகளை ஏற்றி சென்ற வாகனத்தில் ஒரு டயர் வெடித்த நிலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களை மடக்கிய கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர் கூடுதல் எஸ்பி கிர்தான் ரதோர் தலைமையில் 14பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post எருமைகளை ஏற்றிச்சென்ற 2 பேர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Raipur ,Chhattisgarh ,Magasamund ,Arang ,
× RELATED சத்தீஸ்கரில் பாதுகாப்புப்...