×

40க்கு 40 வெற்றிக்கு துணையிருந்த அண்ணாமலையை மாற்றக் கூடாது: இளைஞர் காங்கிரஸ் கலகல போஸ்டர்

முத்துப்பேட்டை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை பற்றி ஏற்கனவே பலர் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் வந்தபிறகு ரொம்ப அதிகமாகவே விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகளை திறந்து பார்த்தால் அண்ணாமலை பற்றி வரும் மீம்ஸ்கள் இளைஞர்களுக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டது. அந்த வரிசையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா தனது சமூக வலைத்தளத்தில், பாஜ தலைவர் அண்ணாமலை குறித்து கிண்டலாக ஒரு செய்தி வெளிட்டுள்ளார். அது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

அதில், ‘பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைவர் நட்டாவுக்கு அன்பான கோரிக்கை. குறைந்தபட்சம் இன்னும் 10 வருட காலத்திற்காவது அண்ணாமலையை தமிழ்நாடு பாஜ தலைவர் பதிவியிலிருந்து மாற்றாமல் இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இந்தியா கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தார்கள். இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது, அண்ணாமலைதான். நகைச்சுவைக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் எங்களை பார்த்துக்கொண்டார். இவரை பாஜ தமிழ்நாடு மாநில தலைவராக நியமித்ததற்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

The post 40க்கு 40 வெற்றிக்கு துணையிருந்த அண்ணாமலையை மாற்றக் கூடாது: இளைஞர் காங்கிரஸ் கலகல போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Yuvadhav Congress Kalakala ,Muthuppet ,Tamil ,Nadu ,BJP ,president ,Facebook ,Twitter ,Instagram ,Youth Congress ,Kalakala ,Dinakaran ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...