×

ராமோஜி ராவ் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவ் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

ஊடகம், இதழியல், திரைப்பட துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டு சென்றுள்ளார். இந்த துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்பு கொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 

The post ராமோஜி ராவ் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ramoji Rao ,Chennai ,Ramoji Group ,K. Stalin ,Padma Vibhushan Ramoji Rao ,
× RELATED ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜிராவ் மரணம்