×

மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தல்

டெல்லி: மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய மராட்டிய அரசு கோரிக்கை

மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தியுள்ளது. நடந்த முடிந்த நீட் தேர்வில் மராட்டிய மாநில மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக மராட்டிய மருத்துவ கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் குற்றச்சாட்டு வைத்தார். நீட் தேர்வு பணம் வாங்கி கொண்டு நடத்தப்படுவதாக மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசே குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேசிய மருத்துவ கவுன்சிலில் முறையிட இருப்பதாகவும் மராட்டிய மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் மராட்டிய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு – சிபிஐ விசாரணை தொடங்கியது

நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. தேசிய மருத்துவக் கவுன்சில் பரிந்துரையின் பேரில் சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது பற்றி விரிவான விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வலுக்கிறது:

நீட் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது பற்றி விரிவான விசாரணை நடத்த ஆர்.ஜே.டி. கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பது அனைத்தையும் ஒன்றாக்கும் சூழ்ச்சி என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தல். ஏற்கனவே தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து மராட்டியம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. நீட் முறைகேடு புகார் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில் இன்று பிற்பகல் இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு: கல்வியாளர்கள்

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுவது வாடிக்கையாக மாறிவிட்டது என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர். பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் நீட் தேர்வு அமைந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

 

The post மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : NEET ,BJP coalition government ,Delhi ,state ,Marathi Government ,Marathi state ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...