×

மக்களவை தேர்தலில் மோடிக்கு நாட்டு மக்கள் தக்க பாடம்.. பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி..!!

சென்னை: மத்தியில் மீண்டும் அமையவுள்ள பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் வரை நீடிக்காது என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசினர்.

புதுச்சேரி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; மத்தியில் மீண்டும் அமையவுள்ள பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் வரை நீடிக்காது. பாஜக கூட்டணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என்று அவர் கூறினர்.

The post மக்களவை தேர்தலில் மோடிக்கு நாட்டு மக்கள் தக்க பாடம்.. பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Lok Sabha elections ,BJP ,Puducherry ,PM ,Narayanasamy ,Chennai ,Lok Sabha ,Chief Minister ,K. Stalin ,
× RELATED வாரணாசி சுற்றுப்பயணத்தில் மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்டதா?