×

தேவர்சோலை பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை: வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காயத்துடன் சுற்றிவந்த சிறுத்தை வனத்துறை வாய்த்த கூண்டில் சிக்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தேவர் சாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் காயத்துடன் ஒரு சிறுத்தை சுற்றி வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்களாக அந்த சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமின்றி 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும், தானியங்கி கேமராக்கள் பொறுத்தியும் வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். இன்று காலை தேவர் சோலை என்னும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

பிடிபட்ட சிறுத்தை ஆக்கிரோஷத்துடன் இருப்பதால் மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்த பின்னரே அந்த சிறுத்தையை கூடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு அந்த சிறுத்தையின் காயத்தை பார்த்து அதன் பின்னரே சிகிச்சை அளிக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் யாரும் தேயிலை தோட்டம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post தேவர்சோலை பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை: வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Devarsolai ,Nilgiris ,Kudalur ,Bandalur Dewar Road Municipality ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...