×

மறு சீரமைப்பை கைவிட கோரி சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

கரூர், ஜூன் 8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் (அன்ஸ்கில்டு) சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கணேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிங்கராயார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்.

மேலும், மாநில செயலாளர் குப்புசாமி, மாநில துணை தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோர்களும் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் வெங்கடேசுவரன் நன்றி கூறினார். நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post மறு சீரமைப்பை கைவிட கோரி சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu Highway Department Road Maintenance Employees (Unskilled) Association ,Chellandipalayam ,
× RELATED தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை...