×

கரூர் மாநகராட்சி தடுப்பு சுவர்களின் தனியார் விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டுகோள்

 

கரூர், ஜூன் 8: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிச் சாலைகளின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்கள் செய்யப்படுவது தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் காந்திகிராமம், சுக்காலியூர், தாந்தோணிமலை போன்ற பகுதிகளில் விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த தடுப்புச் சுவர்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சாலையில் வாகனங்களின் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விளம்பரங்கள் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச் சுவர்களில் விளம்பரங்கள் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post கரூர் மாநகராட்சி தடுப்பு சுவர்களின் தனியார் விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Karur Corporation ,Karur ,Gandhigram ,Sukkaliyur ,Dandonimalai ,Dinakaran ,
× RELATED தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை...