×

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன

 

பந்தலூர், ஜூன் 8: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு ஆண்டன்சிறா அம்ரித்சரோவர் குளத்தை சுற்றியுள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், துணை தலைவர் சந்திரபோஸ், பணி மேற்பார்வையாளர் ஷர்மிளா, ஊராட்சி செயலாளர் சஜீத் மற்றும் பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Environment Day ,Bandalur ,Cherangode ,Panchayat ,Erumadu ,Buffalo Andanchira Amritsarovar Pond ,Cherangode Panchayat ,Nilgiri District ,Serangode ,Dinakaran ,
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி