×

10ம் தேதி முதல் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறும்

 

ஈரோடு, ஜூன் 8: பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10ம் தேதி முதல் வழக்கம் போல நடைபெறும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற 10ம் தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம் போல தொடர்ந்து நடைபெற உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post 10ம் தேதி முதல் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Erode ,Collector ,Rajagopal Sunkara ,Dinakaran ,
× RELATED பதிவு செய்யாமல் இறால் வளா்ப்பு பண்ணை நடத்தினால் நடவடிக்கை