×

மாமல்லபுரத்தில் விரைவில் இந்திய நாட்டிய விழா துவக்கம் நடைபாதை கடைகள் திடீர் அகற்றம்

மாமல்லபுரம்:  மாமல்லபுரத்தில் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட புராதன சின்னங்கள் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள, புராதன சின்னங்ககளை கண்டு ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை கண்டு ரசிக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்துவற்காக, தமிழ்நாடு மற்றும் மத்திய சுற்றுலாத்துறை இணைந்து, டிசம்பர் இறுதி முதல் ஜனவரி வரை இந்திய நாட்டிய விழா நடத்தி வருகிறது. கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கால் நாட்டிய விழா நடத்தவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன், மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்த அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோயில் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, அர்ச்சுணன் தபசு எதிரே உள்ளூர் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்தனர். அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக கடைகள் வைத்து, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வெள்ளரி பிஞ்சு, மாங்காய், கொய்யா உள்பட பழங்கள், காய்கனிகளை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு எதிரே உள்ள நடைபாதை கடைகளால், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும். எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், வருவாய் ஆய்வாளர் ரகு, மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐ அசோக சக்கரவர்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, விஏஓக்கள் நரேஷ்குமார், பூபதி, தூய்மை பணி மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் போலீசார், மேற்கண்ட பகுதிக்கு நேற்று சென்றனர். அப்போது அங்கிருந்த நடைபாதை கடைகளை அகற்றி பேரூராட்சி வாகனத்தில் ஏற்றினர். அதற்கு, அங்கிருந்த கடைக்காரர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், வியாபாரிகளை கடுமையாக எச்சரித்தனர். இதனால், அர்ச்சுணன் தபசு அருகே சுமார் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது….

The post மாமல்லபுரத்தில் விரைவில் இந்திய நாட்டிய விழா துவக்கம் நடைபாதை கடைகள் திடீர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Pallavas ,Chinnangas ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...