×

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்: துரை வைகோ எம்.பி., பேட்டி

சென்னை: திமுக கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை இந்த தேர்தல் காட்டியுள்ளது.

தேர்தல் ஆணையம் கொஞ்சம் நியாயமாக நடந்திருந்தால் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருந்திருக்கும். நடுநிலைமையோடு செயல்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாக 100 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இருக்கும். ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை பாஜ ஒட்டுமொத்தமாக பரப்பியது.

எங்களை பொறுத்தவரை பாஜவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடையாது. கூட்டணி அமைத்துதான் ஆட்சியை அவர்கள் அமைக்க முடியும். அப்படி இருக்கும் போது இனிமேல் பாஜ சர்வாதிகாரமாக செயல்பட முடியாது. மக்களுக்கு எதிரான சட்டங்களை அவர்கள் இனி கொண்டு வர முடியாது. இது ஒரு நல்ல வரவேற்பு. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்: துரை வைகோ எம்.பி., பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,EC ,Durai Vaiko ,CHENNAI ,DMK ,general secretary ,Trichy ,Satyamurthy Bhavan ,Congress ,Tamil Nadu Congress ,Selvaperunthakai ,Election Commission ,Dinakaran ,
× RELATED கருத்து கணிப்புகள் பொய்யாகும்...