×

பி.இ மாணவர் சேர்க்கைக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: நடப்பாண்டு பி.இ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி நள்ளிரவு நிலவரப்படி 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்ப கட்டணத்தையும் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். தொடர்ந்து ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண், ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளிடப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது.

The post பி.இ மாணவர் சேர்க்கைக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : B.E. ,Chennai ,Tamil Nadu Engineering Admissions ,B.E ,
× RELATED பொறியியல் படிப்பு மாணவர்...