×

திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர், ஜூன் 8: திருவள்ளூர் பூங்கா நகர் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி(64). இவரது மகள் ஷாலினி(35) என்பவருக்கு கடந்த 2006ம் ஆண்டு கண்ணன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஷாலினி கண்ணன் தம்பதியினருக்கு 15 வயதில் கோபிகா என்ற மகள் உள்ளார். தந்தை வீட்டிலேயே ஷாலினி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் 5ம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாலினியின் கணவர் கண்ணன் மற்றும் மாமனார் குப்புசாமி திருவள்ளூர் தாலுகா போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த தாலுகா போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்தது. போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kuppusamy ,Tiruvallur Park Nagar Teachers Colony ,Shalini ,Kannan ,
× RELATED தமிழகத்திலேயே அதிக வாக்கு...