×

தையல் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைகூட்டம்

தூத்துக்குடி, ஜூன் 8: தூத்துக்குடியில் மின்சார தையல் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி ஐஎன்டியூசி அலுவலகத்தில் இந்திய தேசிய மின்சார தையல் தொழிலாளர்கள் சங்கக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில், தலைவர் ஜோசப் மனோகர், செயலாளர் சண்முகம், பொருளாளர் வினோத் மற்றும் சேகர், அன்டோ, சூசை, செல்வக்குமார், ஜெயபாண்டி, ஞானராஜ், மிக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின்சார தையல் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post தையல் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைகூட்டம் appeared first on Dinakaran.

Tags : Garment Workers Union ,Thoothukudi ,Thoothukudi Electric Sewing Workers Union ,Indian National Electric Tailors Association ,INDUC ,Tuticorin ,General Secretary ,Kathirvel ,President ,Joseph ,Sewing Workers Union ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி நேருஜி பூங்காவில்...